கடலில் மூழ்கி இரண்டு இளைஞர்கள் மரணம்

பேருவளை மாகல்கந்த கடலில் குளிக்க சென்ற இரண்டு இளைஞர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று(15) நடந்துள்ளது. பேருவளை மாகல்கந்த பிரதேசத்தை சேர்ந்த 19 வயதான டப்ளியூ. பிரபானு கௌல்ய மற்றும் 20 வயதான சலன தில்ஷான் ஆகிய இளைஞர்களே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

18 வயதான இளைஞனே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூன்று இளைஞர்கள் கடலில் குளித்துக்கொண்டிருந்த போது திடீரென அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

பிரதேசவாசிகள் இணைந்து ஒரு இளைஞனை காப்பாற்றியுள்ளனர். இதனையடுத்து கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகள் சுழியோடி தேடுதலில் ஈடுபட்டு இரண்டு இளைஞர்களை மீட்ட போதிலும் ஏற்கனவே அவர்கள் உயிரிழந்து விட்டதாக பேருவளை பொலிஸார் கூறியுள்ளனர்.

உயிரிழந்த இளைஞர்களின் உடல்கள் பேருவளையில் உள்ள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் காப்பாற்றப்பட்ட இளைஞன் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதியது பழையவை