மக்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் விடுத்துள்ள அழைப்பு

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் கைதிகளுக்கான ஆதரவு போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.

கைதிகளுக்கான இந்த ஆதரவு போராட்டம் மட்டக்களப்பில் நாளை(16) நடைபெறவுள்ளது.

பயங்கரவாத தடை சட்டத்தை ஒழிப்போம் என்ற தொனிப்பொருளில் காலை 7.30 மணிமுதல் காந்தி பூங்கா முன்றலில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.


"இந்தக் கொடிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க - அதிலும் தமிழ் பேசும் மக்கள் மீது கூடுதலாகத் திணிக்கப்படும் இந்த சட்டத்துக்கு எதிராக இந்த போராட்டத்தில் அனைவரும் கலந்துகொண்டு உங்கள் ஆதரவை வழங்குங்கள்" என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அழைப்பு விடுத்துள்ளார்.
புதியது பழையவை