அரசியல்வாதிகளை மகிழ்விப்பதற்காகவும், அரசியல் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காகவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அதிக எண்ணிக்கையிலான அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களை நியமித்தமையால் பராமரிப்பு செலவு அதிகமாக ஏற்படும் என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பெப்ரல் அமைப்பு மேலும் தெரிவிக்கையில்,
அமைச்சர்கள் தங்களுக்கு உரிய வேதனத்தை மாத்திரமே ஏற்றுக்கொள்வார்கள் என அரசாங்கத்தின் பிரதம அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலாளரின் சுற்றறிக்கை
எனினும் அது கடினமான விடயம் என்று அமைச்சர்கள் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர். ஜனாதிபதியின் செயலாளரினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் அடிப்படையில் அமைச்சர் ஒருவரின் பணியாளர்கள், 15க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
அத்துடன் அமைச்சர் மற்றும் அவரது பணியாளர்களுக்கும் 6 உத்தியோகபூர்வ வாகனங்களும் ஒவ்வொரு வாகனத்திற்கும் 750 லீற்றர் பெட்ரோலும், 600 லீற்றர் டீசலும் வழங்கப்படும்.
அத்துடன், அமைச்சர் மற்றும் அவரது ஊழியர்களின் தகவல் தொடர்பு மற்றும் தொடர்புடைய செலவுகளையும் அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும்.
எவ்வாறு அங்கீகாரம் அளிக்கப்பட்டது?
இந்த நிலையில் திறமையற்ற அரச ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க முன்வந்த ஜனாதிபதி, அதிக எண்ணிக்கையிலான அமைச்சரவை அமைச்சர்களை நியமிப்பதற்கு எவ்வாறு அங்கீகாரம் அளித்தார் என அந்த அமைப்பு பெப்ரல் கேள்வி எழுப்பியுள்ளது.
அத்துடன் ஊழல் குற்றவாளிகளை அமைச்சரவையில் நியமித்தமையை தொடர்பிலும் பெப்ரல் கேள்வி எழுப்பியுள்ளது.