நாளை முதல் குறைவடையும் எரிவாயு விலை..!

நாளை (05) நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலையை மேலும் குறைக்க நடவடிக்கை எடுப்பதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக சந்தையின் எரிவாயு விலையை கருத்திற்கொண்டு விலைச் சூத்திரத்திற்கு அமைய எரிவாயுவின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 9ஆம் திகதி 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 246 ரூபாவால் குறைக்கப்பட்டது.

12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு

இதற்கமைய 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலன் 4,664 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன், 5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு கொள்கலனின் விலை 99 ரூபாவாலும், 2.3 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 45 ரூபாவாலும் குறைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை