மட்டக்களப்பில் பெண் ஒருவரை காணவில்லை - கணவர் முறைப்பாடு

மட்டக்களப்புஅமிர்தகழி 212 எதிர்மன சிங்கம் வீதி பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாய் காணாமல் போயுள்ளதாக பெண்ணின் கணவர் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு அமிர்தகழி 212 எதிர்மனசிங்கம் வீதி பகுதியை சேர்ந்த தனுஜா கமலராஜ் என்ற இரண்டு பிள்ளைகளின் தாய் கடந்த 11 ஆம் திகதி மட்டக்களப்பு கூழாவடி பகுதியில் உள்ள கோவில் ஒன்றின் திருவிழா நிகழ்வு செல்லும் வழியில் காணாமல் போயுள்ளதாக பெண்ணின் கணவர் கமலராஜ் தெரிவித்துள்ளார்.

காணாமல்போயுள்ள இரண்டு பிள்ளைகளின் தாய் தேடப்பட்டு வரும் நிலையில் குறித்த பெண் தொடர்பாக கடந்த 14ஆம்திகதி பெண்ணின் கணவர் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைபாடு ஒன்றினை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த பெண் தொடர்பாக தகவல் அறிந்தவர்கள் தொலைப்பேசி இலக்கமான 075 7189 457அல்லது 065 222 4356 என்ற மட்டக்களப்பு பொலிஸ் நிலைய இலக்கத்திற்கு தகவல் வழங்குமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
புதியது பழையவை