மண்டூர் கந்தசுவாமி ஆலய உற்சவத்தின் 16ம் நாள் திருவிழா

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படும் மட்டக்களப்பு,மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் 16ஆம் நாள் திருவிழா நேற்று (06)இரவு சிறப்பாக நடைபெற்றது.

உலகிலேயே முருக வழிபாட்டில் தனித்துவமான முறையினையும் மிகவும் பழமையான வழிபாட்டு முறையினையும் கொண்ட மண்டூர் கந்திசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கடந்த 21ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

ஆலயத்தில் தினமும் பூஜைகள் நடைபெற்றுவந்ததுடன் முருகப்பெருமானின் வேல் புட்பக விமானத்தில் ஊர்வலமாக கொண்டுசென்று வெளிவீதியுலா வரும் நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.

புட்பக விமானத்தில் வேல்வடிவில் எழுந்தருளும் முருகப்பெருமான வள்ளியம்மன் ஆலயம் மற்றும் தெய்வானையம்மன் ஆலயங்களுக்கு சென்று மீண்டும் தனது ஆலயத்திற்கு வரும் நிகழ்வுகள் தினமும் நடைபெற்றுவருகின்றன.

பண்டையாக காலம் தொடக்கம் சிறப்பாக நடைபெற்றுவரும் ஆலயத்தின் உற்சவத்தில் நேற்றைய தினமும் பெருமளவான பக்தர்கள் புடைசூழ உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

எதிர்வரும் 10ஆம் திகதி சனிக்கிழமை ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.புதியது பழையவை