பொத்துவில் தொடக்கம் யாழ்பாணம் நல்லூர் ஆலயம் வரையான திலீபனின் உருவப்படம் தாங்கிய வாகன ஊர்வலம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரன் தீயாக தீபம் திலீபனின் 35வது நினைவு தினத்தினை முன்னிட்டு பொத்துவில் தொடக்கம் யாழ்பாணம் நல்லூர் ஆலயம் வரையான திலீபனின் உருவப்படம் தாங்கிய வாகன ஊர்த்தி இன்று (15) பொத்துவில் நகரில் இருந்து ஆரம்பமானது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் நினைவு தின வாகன ஊர்தியை இன்று காலை ஆரம்பித்து வைத்திருந்தனர்.

தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு தீபம் ஏற்றப்பட்டு மலர் தூவி திலீபனின் உருவப்படத்திற்கு பொது மக்கள் தமது அஞ்சலியினை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தியாக தீபம் திலீபன் தொடர்பான நினைவுப் பேரூரை ஒன்றினை நிகழ்த்தினார்.

தியாக தீபம் திலீபனின் உருவப்படம் தாங்கிய வாகன பேரணியானது இன்று பொத்துவில் நகரில் ஆரம்பமாகி இருந்ததுடன் இவ் பேரணியானது எதிர்வரும் 26ந் திகதி யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்தில் நிறைவு பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தியாக தீபம் திலீபனின் நினைவு வாகன ஊர்தி பேரணியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்ளான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செல்வராசா கஜேந்திரன் கட்சியின் மாவட்ட தேசிய அமைப்பாளர்கள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

புதியது பழையவை