உலக தற்கொலை தடுப்பு தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் விழிப்புணர்வு நடைபவனி

உலக தற்கொலை தடுப்பு தினத்தினை முன்னிட்டு உளவியல் ஆலோசனை மையத்தின் விழிப்புணர்வு நடைபவனி இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.

இவ்விழிப்புணர்வு நடைபவணியானது மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து ஆரம்பித்து காந்தி பூங்கா வரை சென்றது.

இதனைத்தொடர்ந்து சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் நாடகத்துறை மாணவர்களினால் விழிப்புணர்வு வீதிநாடகமும் அரங்கேற்றப்பட்டது.

அண்மைக்காலங்களில் உலக அளவில் தற்கொலை செய்து வாழ்வை மாய்த்துக்கொள்ளும் எண்ணிக்கை அதிகரித்துவருவதால் அவற்றை தடுக்கவேண்டியதும், நம்பிக்கையூட்டவேண்டியதும் எம் அனைவரினதும் கடைமையாகும்.

கடந்த 4 வருடங்களுக்கு மேலாக இலங்கையில் இயங்கிவரும் பெக் (Pயுஊ) குழுமம் பாடசாலை மட்டத்திலும், கிராமிய மட்டங்களிலும் உளவியல் சார் செயற்திட்டங்களை நிகழ்த்தி அதில் வெற்றியும் கண்டுள்ளது.

அந்த வகையில் இலங்கையில் மாத்திரம் தனது சேவையை இதுவரைகாலமும் மட்டுப்படுத்தியிருந்த குழுமம் கடந்த ஆண்டுமுதல் சர்வதேச அளவில் தனது சேவையை விஸ்தரித்து தேவையுடையோருக்கான ஆலோசனைகளையும், வாழ்வதற்கான நம்பிக்கையையும் ஊட்டிவருகின்றது.

குறித்த நிகழ்வானது கல்லடிப்பாலத்திலிருத்து ஆரம்பித்து பிரதான வீதியினூடாக நடைபவனியாக சென்று காந்திப்பூங்காவில் நிறைவடைந்தது.

அங்கு சுவாமி விபுலானாந்தா அழகியற்கற்கைகள் நிறுவன உதவி விரிவுரையாளர்களான ந.வர்ணராஜ் மற்றும் மு.கேமராஜ் அவர்களின் தலைமையில் மாணவர்களின் விழிப்புணர்வு வீதி நாடகமும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு உளவியல் ஆலோசனை மையத்தின் உறுப்பினர்கள், இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


புதியது பழையவை