இரண்டு நாட்களுக்கு மின்வெட்டு இல்லை

மின்வெட்டு தொடர்பான தகவல்களை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இன்று (10) மற்றும் நாளை (11) மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதேவேளை, நாளை மறுதினம் அதாவது செப்டம்பர் 12 ஆம் திகதி 01 மணித்தியால மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்வெட்டு நடைமுறைப்படுத்தவுள்ள நேரம்

இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் 1 மணிநேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், மாலை 6 மணி தொடக்கம் 9 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இந்த மின்வெட்டு 1 மணிநேர இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை