சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின் பிரதானி சமந்தா பவர் இன்று நாட்டுக்கு விஜயம்

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின் பிரதானி சமந்தா பவர் இன்று நாட்டுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அவர் இலங்கைக்கு வருகைத்தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடும் வகையில் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின் பிரதானி சமந்தா பவர் நாட்டுக்கு விஜயம் மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின்போது அரசாங்கத்தின் போது ஜனாதிபதி உயர்மட்ட அதிகாரிகள், தனியார்துறைசார் பிரதிநிதிகள், உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடவுளளார்.

அத்துடன் இலங்கை மக்களுக்கு உதவிகளை வழங்கத் தயாராக இருக்கும் அமெரிக்காவின் நிலைப்பாட்டை சமந்தா பவர் மீளுறுதிப்படுத்துவார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதியது பழையவை