தெமட்டகொட புகையிரதப் பகுதிக்குள் பயணித்த புகையிரதமொன்று தண்டவாளத்தை விட்டு விலகி பழைய கட்டிடமொன்றுக்குள் புகுந்ததில், குறித்த கட்டிடத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெமட்டகொட பொலிஸார் தெரிவித்தனர்.
பராமரிப்பு நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட புகையிரதமானது நிறுத்தல் வரம்பை மீறியதால் இந்த விபத்து ஏற்பட்டதோடு, இதனால் அருகில் உள்ள கட்டித்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புகையிரத சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே விபத்துக்கான காரணமென விசாரணையில் தெரியவந்துள்ளது.