இலங்கையில் நாளொன்றுக்கு 12 மார்பக புற்று நோயாளர்கள் பதிவு

இலங்கையில் நாளொன்றுக்கு 12 மார்பக புற்று நோயாளர்கள் பதிவாகி வருவதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் கடந்த இரண்டு தசாப்தங்களில் மார்பக புற்றுநோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் ஹசரேலி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு, உள்ளூர் அளவில் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அடையாளம் காணப்பட்ட நோயாளிகளை சிகிச்சைக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வைத்தியர் ஹசரேலி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை