மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை கஞ்சா விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
வெல்லாவெளி காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட சிங்காரபுரம் பகுதி வீடு ஒன்றில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் மல்வத்தை விசேட அதிரடி படையினர் குறித்த தேடுதல் நடவடிக்கை மேற்கொண்ட நிலையில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 1 கிலோ 600 கிராம் நிறையுடைய கஞ்சா பொதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.