மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 35ஆம் கிராமம் கண்ணபுரம் பகுதியில் இன்று(20-10-2022) புகுந்த யானைகளினால் ஆலயத்தின் கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன் 10க்கும் மேற்பட்ட வீடுகளை சேதப்படுத்தியுள்ளதுடன் பயன்தரு மரங்களும் அழிக்கப்படடுள்ளது.
35ஆம் கிராமம் கண்ணபுரம் பகுதியில் உள்ள சிறி நாராயணன் ஆலயத்திற்குள் புகுந்த யானைகளே இந்த சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.
ஆலய திருப்பணிவேலைக்காக கட்டப்பட்ட கட்டிடத்தின் கதவு மற்றும் தென்னை மரங்கள் மின் இனைப்பு பெட்டி ஆகியவற்றினை முற்றாக உடைத்து சேதப்படுத்தியுள்ளது.
இன்று அதிகாலை 35ம் கிராமத்துக்கு புகுந்த யானை 10 மேற்பட்ட வீடுகளை தாக்கி சேதப்படுத்தியுள்ளதுடன் பயிர்களையும் சேதப்படுத்தியுள்ளது.




