369 அடி சிவபெருமான் சிலை இன்று திறக்கப்படுகிறது

ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவட்டத்தில் உள்ள நத்வாரா நகரில், 'விஸ்வஸ்ரூபம்' என்று அழைக்கப்படும் பிரமாண்ட சிவன் சிலை இன்று திறக்கப்படுகிறது.

மொத்தம் 3 ஆயிரம் டன் உருக்கு மற்றும் இரும்பு, கான்கிரீட் மற்றும் மணல் ஆகியவற்றை பயன்படுத்தி, 10 ஆண்டுகளில் இந்த சிலை கட்டப்பட்டிருக்கிறது.

சுமார் 250 ஆண்டுகள் நீடிக்கும் வகையிலும், 250 கி.மீ. வேகத்தில் வீசும் காற்றை தாங்கும் வகையிலும் இந்த சிவன் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை