துப்பாக்கிச்சூடு - இளைஞன் உயிரிழப்பு

நீர்கொழும்பில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று (23-10-2022) மாலை இடம்பெற்றுள்ளது.
நீர்கொழும்பு ஆண்டிஅம்பலமவில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுத் தப்பிச் செல்ல முற்பட்டவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 22 வயதுடைய நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

மற்றுமொரு நபர் காயமடைந்துள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைளை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
புதியது பழையவை