மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் கைது

மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது சம்பவம் நேற்று (03.10.2022) நடந்துள்ளது.
23 வயதுடைய இளைஞரொருவர் 4 வீடுகளை உடைத்து அங்கிருந்து 1700000ரூபா பெறுமதியான பொருட்களை திருடிச் சென்றுள்ளார்.

மக்கள் முறைப்பாடு
கடந்த ஒரு மாதத்திற்கு முன் வாழைச்சேனை பகுதி வாழ் மக்களால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறித்த இளைஞனை கைது செய்த போது ஹரோயின் போதைப்பொருளும் அவரிடம் இருந்து மீட்க்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை