ஜெனீவா செல்கிறார் அலி சப்ரி!

எதிர்வரும் 7 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் நிறைவடைகின்றது. 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரின் இறுதி நிகழ்வில் பங்கேற்க வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஜெனீவா நோக்கி பயணமாகவுள்ளார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை தொடர்பில் கனடா, ஜேர்மனி மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இணைந்து தயார் செய்துள்ள இலங்கை தொடர்பிலான அறிக்கை எதிர்வரும் 7 ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது எனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

நல்லிணக்கம், பொறுப்புகூறல், மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதியது பழையவை