இனப்பிரச்சினைக்கான முழுமையான தீர்வு புதிய அரசமைப்பினூடாக ஒரு வருட காலத்துக்குள்ளே செய்து முடிக்கப்படும் என்ற அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் வாக்குறுதியைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
புதிய அரசமைப்பினூடாக இனப்பிரச்சினைக்கான முழுமையான தீர்வு காண்பது தொடர்பான வேலைத்திட்டம் உடனடியாக நடைபெற வேண்டும்.
அதை அதிபர் முன்னெடுக்கின்ற போது எங்களுடைய முழுமையான இணக்கப்பாடும் முழுமையான ஆதரவும் அதற்கு இருக்கும் என்பதே எங்களுடைய உத்தியோகபூர்வ நிலைப்பாடாகும்.
அதிபர் ரணில் விக்கிரமசிங்க, பிரதமராக இருந்த காலப்பகுதியில் எவ்வளவு சேர்ந்து செயற்பட்டோம் என்பதை அவர் அறிவார்.
2016 ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து நாடாளுமன்றம் அரசமைப்பு பேரவையாக மாற்றப்பட்ட காலத்திலிருந்து ஒரு பிரேரணை நிறைவேற்றப்பட்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து இதற்கான முன்னெடுப்புக்காக வழிகாட்டல் குழு எல்லாம் அமைக்கப்பட்டது.