புதையல் தோண்டச் சென்ற 8 பேர் கைது!

கடவத்தை நகரில் அமைந்துள்ள வீடொன்றில் புதையல் தோண்டச் சென்ற 8 பேரை கடவத்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று (25) இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 8 சந்தேக நபர்களும் கடவத்தை மற்றும் வெலிவேரிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என கடவத்தை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்களுடன் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட மண் தோண்டும் இயந்திரம், தண்ணீர் மோட்டார் மற்றும் ஏனைய உபகரணங்களும் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று (26) மஹர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபடவுள்ளனர்.

புதியது பழையவை