மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச சபையின் புதிய பதில் செயலாளராக வி.கௌரிபாலன் அவர்கள் நேற்று(25-10-2022) கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
வரவேற்பு நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் யோ.ரஜனி பிரதேச சபையின் உப தவிசாளர் தர்மலிங்கம் பிரதேச சபை உறுப்பினர்கள் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டு புதிய செயலாளர்களுக்கு மலர் மாலை அணிவித்து வரவேற்றனர்.
அதனைத் தொடர்ந்து புதிய செயலாளர் அலுவலகத்துக்கு சென்று தனது கடமைகளை பொறுப்பேற்கும் பதிவேட்டில் கையொப்பமிட்டு கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.