மட்டக்களப்பில் - கைக்குண்டு கண்ணிவெடி மீட்பு!

மட்டக்களப்பு மாவட்டம் – கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள ஈரளக்குளம் காட்டுபகுதியில் கைவிடப்பட்டிருந்த கைக்குண்டு மற்றும் கண்ணிவெடியை நேற்று(26) புதன்கிழமை இராணுவத்தினர் மீட்டு ஒப்படைத்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

விமானப்படை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய சம்பவதினமான நேற்று மாலை இராணுவத்தினருடன் விமானப்படை புலனாய்வு பிரிவினர் இணைந்து ஈரளக்குளம் காட்டுப்பகுதியில் கைவிடப்பட்டிருந்த கைக்குண்டு ஒன்றும் கண்ணிவெடி ஒன்றையும் மீட்டு கரடியனாறு பொலிஜ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இதேவேளை இந்த பகுதி கடந்த காலத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதியது பழையவை