வவுனியாவில் கட்டுத்துப்பாக்கியில் சிக்குண்டு ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்றுமுன் தினம் (23.10.2022) பதிவாகியுள்ளது.
இதன்போது 31 வயதுடைய ப.நிபோதரன் என்ற நபர் படுகாயமடைந்துள்ளார்.
காயமடைந்தவர் வைத்தியசாலையில்
வவுனியா - ஓமந்தை சின்னக்குளத்தில் மீன்பிடிக்க சென்று மீண்டும் காட்டு வழியாக வீடு திரும்பும் போதே குறித்த நபர் கட்டுத்துப்பாக்கியில் சிக்குண்டுள்ளார்.
இதன் காரணமாக இடது காலில் பலத்த காயங்களிற்குள்ளான நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.