மட்டக்களப்பு மாவட்ட இளைஞன் அவுஸ்திரேலியாவில் மரணம்

அவுஸ்திரேலியாவில் இலங்கை தமிழ் இளைஞன் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த றோமன் - அலெக்சாண்டர் எனும் இளைஞரே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த இளைஞர் Melbourne, Victoria, Australia பகுதியில் தனித்து வசித்துவந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இளைஞனின் உடலில் காயங்கள்
உயிரிழந்த இளைஞனின் உடலில் காயங்கள் காணப்படுவதாகவும், இந்நிலையில் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு எடுத்துசெல்லப்பட்டுள்ளதாகவும் Melbourne தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை இளைஞர் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியாகாத நிலையில், இது கொலையா, தற்கொலை என்ற கோணத்தில் Melbourne பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
புதியது பழையவை