இலங்கைக்கு தென்கிழக்கில் ஏற்பட்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதாகவும் ,இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட வளிமண்டலவியல் திணைக்கள பொறுப்பதிகாரி சுப்பிரமணியம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டக்களப்பில் 54.6 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சியும், நவகிரியில் 58.0மில்லிமீட்டர் மழைவீழ்ச்சியும் , தும்பங்கேணியில் 22.5 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சியும் , மயிலம்பாவெளியில் 43 .4 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சியும் , பாசிக்குடாவில் 26.6 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சியும் , கிறான் பிரதேசத்தில் 35.2 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சியும் , உன்னிச்சையில் 35.0மில்லிமீட்டர் மழைவீழ்ச்சியும் , ஊருகாமவில் 31.5 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சியும் , வகனேரியில் 12.4 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சியும் ,கட்டுமுறிவு குளம் பகுதியில் 37.5 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சியும் , கல்முனையில் 17.1.மில்லிமீட்டர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக மாவட்ட வளிமண்டலவியல் திணைக்கள பொறுப்பதிகாரி சுப்பிரமணியம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
எனவே நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் மழையுடனான வானிலை அதிகரித்து காணப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட வளிமண்டலவியல் திணைக்கள பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
தேசிய வளிமண்டளவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் இன்று அதிகாலை வெளியிடப்பட்ட வானிலை தொடர்பான மட்டக்களப்பு மாவட்ட வளிமண்டளவியல் திணைக்கள பொறுப்பதிகாரி சுப்ரமணியம் ரமேஷ் மேலதிக தகவல்களை வழங்கினார்.