மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் மழை காரணமாக விவசாய நிலங்கள் மூழ்கும் நிலையேற்பட்டுள்ளதனால் வெள்ள நிலைமையினை கட்டுப்படுத்தும் வகையில் முகத்துவாரத்தின் ஊடாக வெள்ள நீரை கடலுக்குள் வெளியேற்றும் செயற்பாடுகள் இன்று 06-11-2022 (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இப்பகுதியில் உள்ள மீனவர்கள் பாதிக்கப்படுவதாகவும் இப்பகுதியில் உள்ள வாவிக்கரையை அண்டிய பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதன் காரணமாக இதனை வெட்ட வேண்டிய அவசியம் உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.