திருகோணமலை தம்பலகாமம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட கண்டி திருகோணமலை பிரதான வீதியின் தம்பலகாமம் சந்தியை அண்மித்த சுவாமிலை பகுதியில் சருகுப்புலி மகிழுந்துடன் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் இடம் பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (11) காலை இடம் பெற்றுள்ளது.
காட்டுப்பகுதியில் இருந்து கோழியை பிடித்துக் கொண்டு பிரதான வீதியை கடக்க முற்பட்ட போதே மகிழுந்துடன் மோதி சருகுப் புலி விபத்துக்குள்ளானது.
பலத்த காயங்களுக்கு உள்ளான குறித்த புலியை வனஜீவராசிகள் திணைக்களத்தினர் உரிய பகுதிக்கு சென்று மீட்டுச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கந்தளாய் வனஜீவராசி திணைக்களத்தினர் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.