அம்பாறை- மாணிக்கமடு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய மஹா கும்பாபிஷேக பெறுவிழாவானது இன்று (2022/11/11) வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
சிவனருள் அறக்கட்டளையின் ஸ்தாபகர் Dr.J.நமசிவாயம் ஐயா (லண்டன்) அவர்களின் நேரடி ஒழுங்கமைப்பில் தன்னார்வ சமூக செயற்பாட்டாளர் T.பாலேந்திரா ஐயா (லண்டன்) அவர்களின் 2.1 மில்லியன் ரூபா நிதி அனுசரணையில் புனர்நிர்மானம் செய்யப்பட்ட குறித்த ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகமானது இறையருள் திருவருளுடன் இன்று இனிதே நடைபெற்றது.
இவ்வாலயமானது அம்பாறை மாவட்டத்தின் சகோதர சமயத்தவர்களின் மத்தியில் காணப்படும் சமூக சமய பொருளாதார ரீதியில் பல சவால்களை எதிர்கொள்கின்ற சைவ சமயப் பற்றுள்ள ஓர் எல்லைக் கிராமமாக விளங்கும் மாணிக்கமடு கிராமத்தில் அமைந்துள்ளது.
12 வருடங்களுக்கு ஒருமுறை நிகழும் இவ் கும்பாபிஷேக நிகழ்வானது இன்று மிகவும் சிறப்பாக இடம்பெறுவதால் மிகுந்த மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் இக்கிராம மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளமையையிட்டு சிவனருள் அறக்கட்டளை நிறுவனத்தினருக்கும் சமூக சேவை செயற்பாட்டாளர் T. பாலேந்திரா அவர்களுக்கும் அக்கிராம மக்கள் மிகுந்த நன்றியினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.