அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பிரதேச தொலைத்தொடர்பு நிலைய ஊழியர்களினால் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.தொலைத் தொடர்பு நிலையத்தை தனியாருக்கு வழங்குவதைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
அரசாங்கத்திற்கு வருமானத்தை ஈட்டித்தரும் இந் நிறுவனத்தை ஏன் தனியாருக்கு வழங்க வேண்டும் என கேட்டு இந் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இலங்கையில் வருமானம் ஈட்டும் தொலைத் தொடர்பு நிலையமானது கடந்த கொரேனாக்காலங்களிலும் உத்தியோகஸ்தர்கள் ஊழியர்கள் தங்கள் கடமைகளை மேற்கொண்டு மக்களுக்கு சேவையினை வழங்கி வந்தார்கள் ஆனால் இந் நிறுவனத்தை தனியாருக்கு வழங்குவதன் மூலம் பாரிய இழப்பினை காரியாலய உத்தியோகஸ்தர்களும் ஊழியர்களும் சந்திக்க நேரிடும் அதனால் இந் நிறுவனத்தை தனியாருக்க வழங்குவதை நிறுத்துமாறு தொலைத் தொடர்பு நிலைய நிறுவன ஊழியர்கள் கேட்டுக் கொண்டனர்.