நேற்று வெளியான 2021 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் அடிப்படையில் மட்டக்களப்பு கல்வி வலயம் சிறந்த அடைவுமட்டத்தை அடைந்துள்ளதாக வலயக்கல்விப்பணிப்பாளார் சுஜாதா குலேந்திர குமார் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு கல்வி வலயத்தில் இருந்து பரீட்சைக்கு தோற்றிய 2156 மாணவர்களில் 128 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் எ தர சித்திகளை பெற்றுள்ளதுடன் 2021 ஆம் ஆண்டு பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 80.64 என்ற சித்தி வீதத்தினை அடைந்துள்ளதாக மட்டக்களப்பு வலயக்கல்விப்பணிப்பாளார் தெரிவித்துள்ளார்.
நேற்று வெளியான 2021 ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக வலயக்கல்விப்பணிப்பாளார் சுஜாதா குலேந்திர குமார். டான் தொலைக்காட்சி செய்தி பிரிவுக்கு கருத்து தெரிவித்தார்.