கம்பஹாவுக்கு அருகில் உள்ள பிரதேசம் ஒன்றை சேர்ந்த பெண்ணொருவர் வீட்டின் மேல் மாடியில் இருந்து கீழே குதித்து காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
40 வயதான இந்த பெண் நிறைவேற்று அதிகாரியாக தொழில் புரிந்து வருபவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
பெண் மாடியில் இருந்து கீழே குதித்த பின்னர், அவரது கணவர் 1990 அம்பியூலன்ஸ் வண்டிக்கு அறிவித்து, வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
பெண் மாடியில் இருந்து குதித்ததன் காரணமாக அவரது முதுகெலும்புகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால், அவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
வீட்டில் நடக்கும் தொந்தரவுகளை தாங்க முடியாது, வீட்டின் மேல் மாடியில் இருந்து கீழே குதித்ததாக பெண் தெரிவித்ததாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
சம்பவம் தொடர்பாக கம்பஹா தலைமையக பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதகர் அகில ரணசிங்கவின் நெறிப்படுத்தலின் கீழ் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றனர்.