அரசாங்க ஊழியர்கள் தொடர்பில் முக்கிய அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, அதிகரித்துள்ள போக்குவரத்துச் செலவுகளைக் கருத்திற் கொண்டு வீட்டுக்கு அருகாமையில் உள்ள அலுவலகங்களில் பணி செய்வதற்கான வாய்ப்பு அரச ஊழியர்களுக்கு வழங்கப்படுகின்றது.
இடமாற்றம் செய்யும் முறை
இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி, வீட்டுக்கு அண்மித்த பிரதேசங்களில் உள்ள அரச அலுவலகங்களுக்கு அரச ஊழியர்களை இடமாற்றம் செய்யும் முறைமை ஏற்படுத்தப்படவுள்ளது.
போக்குவரத்துக் கட்டணங்கள் உயர்வால் பேருந்துகளில் கடமைக்குச் செல்ல முடியாமல் அரச ஊழியர்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.