மட்டக்களப்பு முனைத்தீவில் சாதனையாளர்கள் கௌரவிப்பு


மக்களை அடக்குவதற்கு கோட்டபாய மேற்கொண்ட அடக்குமுறைகளை விட அதிகமான அடக்குமுறைகளை இன்றைய ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் முன்னெடுத்துவருவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டு.போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முனைத்தீவில் சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு இன்று (13-11-2022) நடைபெற்றது.

முனைத்தீவினை சேர்ந்த அமரத்துவமடைந்த காளிக்குட்டி சுப்ரமணியம் அவர்களின் நினைவாக முனைத்தீவு சக்தி மகா வித்தியாலயத்தில் சாதனை படைத்த மாணவர்கள் மற்றும் முனைத்தீவு கிராமத்தில் சாதனை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்வு நடாத்தப்பட்டது.

அருளானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக போரதீவுப்பற்று கோட்டக்கல்வி அதிகாரி த.அருள்ராஜா,முனைத்தீவு சக்தி மகா வித்தியாலய அதிபர் எஸ்.உதயகுமார்,போரதீவுப்பற்று பிரதேசசபை உறுப்பினர் ம.சுகிகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

உயர்தரம்,சாதாரண தரம்,புலமைப்பரிசில் பரீட்சை என்பனவற்றில் சாதனைகள் படைத்த முனைத்தீவு கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் இதன்போது பாராட்டி
கௌரவிக்கப்பட்டனர்.
புதியது பழையவை