ஒரு கிராமத்தையே தன் வசமாக்கிய நரிகள்

நரிகளின் அச்சுறுத்தல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.

இச் சம்பவம் யக்கல வரெல்லவத்தை பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.

இந்தப் பிரச்னைக்கு அதிகாரிகள் உடனடி தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யக்கல ஹெட்டியதெனிய, மிரிஸ்வத்த, ஹன்சகிரிய முதலான பகுதிகளில் சில மாதங்களாக நரிகளின் நடமட்டாம் காரணமாக மக்களின் அன்றாட நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

அப்பகுதியில் விவசாயம் செய்யப்படாத நெல் வயலை ஒட்டியுள்ள வனச்சூழலில் இருந்து இந்த நரிகள் கிராமத்திற்கு வருவதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

குள்ளநரிகளின் பயம் காரணமாக, அப்பகுதி மாணவர்கள் பாடசாலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


அப்பகுதி மக்கள் தினமும் காலையில் பட்டாசுகளை கொளுத்தி வேலைக்குச் செல்கின்றனர்.

இப்பிரச்னைக்கு அதிகாரிகள் உடனடி தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதியது பழையவை