சாணக்கியனின் மட்டக்களப்பு காரியாலய பெயர்ப் பலகை இனந்தெரியாதோரால் சேதம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனின் மட்டக்களப்பு காரியாலய பெயர்ப் பலகை இனந்தெரியாதோரால் சேதமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மத்திய வீதியில் அமைந்துள்ள மக்கள் சந்திப்பு காரியாலயத்தின் பெயர்ப் பலகையே நேற்றிரவு சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்ற உறுப்பினரின் மக்கள் சந்திப்பு காரியாலயம், கடந்த 2 வருடங்களாக செயற்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில், காரியாலய உத்தியோகத்தரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
புதியது பழையவை