ஐந்து வங்கிகளுக்கு எதிராக மத்திய வங்கி எடுத்துள்ள நடவடிக்கை

2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதி பரிவர்த்தனைகள் அறிக்கையிடல் சட்ட விதிகளுக்கு இணங்காத ஐந்து வங்கிகளுக்கு எதிராக இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி குறித்த வங்கிகளுக்கு நிதி அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன.

டீஎப்சீசீ, இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய அபிவிருத்தி வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி ஆகியவற்றுக்கே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அபராதமாக வசூலிக்கப்பட்ட பணம் ஒருங்கிணைந்த நிதியில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.






புதியது பழையவை