இலங்கை சிங்கள பாடகர் நிஹால் நெல்சன் இன்று (13) காலை தனது 76 வயதில் காலமானதாக தகவல் வெளியாகி உள்ளது.
இவர் விபத்தின் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர் தை மாதம் 9 ஆம் திகதி 1946 இல் மொரட்டுவை பிரதேசத்தில் பிறந்துள்ளார்.
அத்தோடு இவர் ராவத்தவத்தை மெதடிஸ்ட் கல்லூரியிலும் மொரட்டு மகா வித்தியாலயத்திலும் கல்வி பயின்றார்.
சிங்கள இசை உலகில் பல்லவி பாடகராக வலம் வந்த நிஹால் நெல்சன் "குழந்தைகளுக்கு பால் கொடுத்தது, காவடி தாலாட்டு, அழகாக மலர்ந்த காட்டுப்பூக்கள், கருணா ஹிமான், பண மூட்டைகள்" என பல பிரபலமான பாடல்களை பாடினார்.