மட்டக்களப்பு மாவட்டம் தரவை மாவீரர் துயிலுமில்லத்தில் வனவள திணைக்களம் எனும் பெயரில் இராணுவம் தேக்கு மரக்கன்றுகளை நடுவதற்கு குழிகளை வெட்டிவந்த வேளை மக்களால் விரட்டியடிப்பு.
தகவலை கேள்விப்பட்ட மக்கள் விரைந்து சென்று தடுக்க முற்பட்டபோது தாக்கி விட்டு இராணுவத்தினர் தப்பியோடியுள்ளனர்.
அப்பாவி கூலித் தொழில் செய்யும் இளைஞர்களைக்கொண்டு இராணுவத்தினர் மட்டக்களப்பு தரவை துயிலுமில்லத்தில் மரக்கன்றுகளை நட்டு,
வனவளத்துறையின் பாதுகாப்பின் பெயரை சொல்லி துயிலுமில்லத்தை கைப்பற்ற முயற்சித்த வேளை, அந்தச்சதி மக்களால் முறியடிக்கப்பட்டது.