உள்ளூராட்சி சபைத் தேர்தலை மார்ச் 4 ஆம் திகதி வெளிவந்த தகவல்



உள்ளூராட்சி சபைத் தேர்தலை மார்ச் 4 ஆம் திகதி நடத்துவது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு ஆராய்ந்துள்ளது.

தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் விசேட கூட்டம் இன்று (03)கொழும்பில் நடைபெற்றது.

இதன் போது மார்ச் 10 ஆம் திகதிக்குள் தேர்தலை நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டதுடன், தேர்தலை மார்ச் 4ஆம் திகதி நடத்துவது பற்றியும் ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான வேட்பு மனுக் கோரல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நாளை மறுதினத்திற்குள் வெளியிடப்படவுள்ளது.


கடந்த வருடம் மார்ச்சில் பிரதேச சபைகள், நகர சபைகள் மற்றும் மாநகர சபைகள் என 340 உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் ஓராண்டு காலம் நீடிக்கப்பட்டது.


இதன்படி, 2023 மார்ச் 20 ஆம் திகதி புதிய சபைகள் நிறுவப்பட வேண்டும்.

அதேபோல் தேர்தலை நடத்துவதற்கான நிதியை திரைசேரியிடம் இருந்து தேர்தல் ஆணைக்குழு கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை