'பெப்ரவரி - 4' தமிழ் தேசம் மீதான ஆக்கிரமிப்பு நாள் - போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக சுவரொட்டிகள்



இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடனப்படுத்தி யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து எழுச்சிப் போராட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் இதற்கு வலுச்சேர்க்கும் முகமாக இன்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டம்


பல்கலைக்கழக மாணவர்களும் தமிழ் இளைஞர்களும் இணைந்து சுவரொட்டிகளை ஒட்டி ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.

இராணுவ புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் காவல்துறை கெடுபிடிகளுக்கு மத்தியிலும் இதற்கான வேலைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
புதியது பழையவை