பணத்திற்காக 15 வயது சிறுமி - வர்த்தகர்கள் உள்ளிட்ட பல்வேறு நபர்களுக்கு விற்பனைபணத்திற்காக 15 வயது சிறுமியை வர்த்தகர்கள் உள்ளிட்ட பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்த சம்பவம் ஒன்று பாணந்துறை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாய் மற்றும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் அதிரடி
பணத்திற்காக 15 வயது சிறுமி விற்பனை:தாய் உட்பட நான்கு பேர் அதிரடி கைது | 15 Year Old Girl For Sale For Cash Panandura

சம்பவம் தொடர்பில் 42, 45, 54 மற்றும் 84 வயதுடைய பாணந்துறை, கெசல்வத்த மற்றும் கோரக்கன பிரதேசங்களைச் சேர்ந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுமி ஒருவரை பணத்திற்காக வயதானவர்களுக்கு விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸ் குழுவினர் சிறுமியை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சந்தேகநபர் தலைமறைவு
பணத்திற்காக 15 வயது சிறுமி விற்பனை:தாய் உட்பட நான்கு பேர் அதிரடி கைது | 15 Year Old Girl For Sale For Cash Panandura

மேலும் பொலிஸ் விசாரணையில், அப்பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், சிறுமியின் தாயை ஏமாற்றி பணம் கொடுத்து சிறுமியை விற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

சந்தேகத்திற்கிடமான தொழிலதிபரான பெண், பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரைக் கண்டுபிடிக்க விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இதேவேளை பணம் கொடுத்து சிறுமியை அழைத்துச் சென்ற மற்ற நபர்களை கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்
புதியது பழையவை