விபச்சார விடுதி சுற்றிவளைப்பு



கண்டி வெலிக்கடை பகுதியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபசாரவிடுதியொன்றை நேற்றுமுன்தினம் (26) கண்டி ஊழல் ஒழிப்பு அதிகாரிகள் குழுவினர் சுற்றிவளைத்துள்ளனர்.

இதன்போது அங்கிருந்த மூன்று பெண்களையும் கைது செய்துள்ளனர்.

மேலும் சுற்றிவளைப்பின் போது முகாமையாளர் தப்பிச் சென்றுள்ளதாகவும் அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

விபசாரத்தில் ஈடுபட்டமை மற்றும் விபச்சாரத்திற்காக காத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ் சந்தேகத்திற்கிடமான பெண்களை நீதி மன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.


கம்பளை, கண்டி மற்றும் கொழும்பு ஆகிய இடங்களில் வசிக்கும் 31, 32 மற்றும் 33 வயதுகளையுடைய பெண்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

கண்டி காவல்துறை தலைமையக பிரதான காவல்துறை பரிசோதகர் ரசிக சம்பத்தின் பணிப்புரைக்கமைய இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவின் பிரதான காவல்துறை பரிசோதகர் திலக் சமரநாயக்க உள்ளிட்ட குழுவினர் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
புதியது பழையவை