சுதந்திர தினத்தன்று பாரிய போராட்டம் - மட்டக்களப்பில் சுவரொட்டிகள்
எதிர்வரும் 04-02-2023 திகதி இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழர் தேசம் மீதான அபகரிப்பு கரிநாள் என சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

பொலிகண்டியில் இருந்து ஆரம்பமாகும் எழுச்சி போராட்டத்துக்கு வலு சேர்க்கும் முகமாக கிழக்கு மாகாணத்தை முன்னிறுத்தி குறித்த போராட்டத்துக்கு ஆதரவு திரட்டும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன.

தமிழர்கள் மீதான அட்டக்கு முறைக்கு எதிராகவும் இலங்கை அரசாங்கத்தின் திட்டமிட்ட செயற்பாடுகளை கண்டித்தும் மாபெரும் பேரெழுச்சி போராட்டம் ஒன்றை இணைந்த வடகிழக்கு பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் ஏற்பாடு செய்திருக்கின்றது.

குறித்த போராட்டத்துக்கு இலங்கையில் உள்ள அனைத்து மக்களையும் பங்கு பெற அழைப்பு விடுத்துள்ளனர்.

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையிலான எழுச்சி போராட்டத்தின் அடுத்த கட்டமாக இந்தப் போராட்டம் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் இடம்பெறவுள்ளது.


பொலிகண்டியில் ஆரம்பமாகும் போராட்டமானது திருகோணாமலை மற்றும் அம்பாறையில் இருந்து மட்டக்களப்பில் மிகவும் எழுச்சியாக இடம் பெற உள்ளது .


குறித்த தமிழர் மீதான அடக்குமுறைக்கான போராட்டத்திற்கு அனைவரையும் அன்புடன் அழைத்து நிற்கின்றனர் ஏற்பாட்டுக் குழுவினர்.புதியது பழையவை