அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல், முட்டைகளை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தியாளர்களைக் கண்டறிய நாடளாவிய ரீதியில் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. குறித்த வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் தலைவர் சட்டத்தரணி சாந்த நிரியல்ல தெரிவித்துள்ளார்.
வெள்ளை முட்டையொன்று அதிகபட்ச சில்லறை விலையாக 44 ரூபாவிற்கும், சிவப்பு முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 46 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட வேண்டுமென நுகர்வோர் அதிகாரசபை நேற்றைய தினம், வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.