புதிய மாணவர்களை தேர்ந்தெடுப்பதற்கான நேர்முகப் தேர்வு பின்வரும் தினங்களில் மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லூரியில் நடைபெற ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
நேர்முகப் பரீட்சைகள் ஜனவரி 23,24,25,26,27,28,29,30, 31 மற்றும் பெப்ரவரி 01,02,03,04 ஆம் திகதிகளில் இடம்பெறும்.
நேர்முகத் தேர்வுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான கடிதங்களில் ஒரு தொகுதி இன்று தபாலிடப்பட்டதாகவும் ஏனையவை திங்கள் தபாலிடப்படும் எனவும் தெரியவருகிறது.
தேர்வாகும் ஆசிரிய மாணவர்களுக்கான பதிவு மார்ச் மாத நடுப்பகுதியில் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.