ஆண்டுதோறும் தை முதல் நாள் பொங்கல் வைத்து வழிபாடு செய்து வரும் நிலையில் பொங்கல் வைக்கும் புதுமண தம்பதிகள் கவனிக்க வேண்டியவை தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.
விடியற்காலையிலேயே வாசலில் நீர் தெளித்து அரிசி மாவால் கோலமிட வேண்டும். வண்ணக் கோலங்கள் இடுவது கூடுதல் சிறப்பு. பொங்கல் வைக்க உள்ள இடத்தை மாட்டு சாணம், மஞ்சள் கலந்து தெளித்து பின்னர் அங்கும் கோலமிட வேண்டும்.
பொங்கல் பொங்க உள்ள அடுப்பையும் சாணத்தால் மொழுகி கோலமிட்டு மஞ்சள், குங்கும் இட வேண்டும். திருநீறை கரைத்து பட்டையாகவும் இடலாம். பொங்கல் பானையை சுத்தமாக கழுவி மண்பானையாக இருந்தால் மாவு கரைசல் கோலமிடலாம். மற்ற பொங்கல் பாத்திரங்களில் திருநீர் இட்டு மஞ்சள், குங்குமம் வைக்க வேண்டும்.
மண்பானை, விறகு அடுப்பில் பொங்கல் வைக்க முடியாதவர்கள் காஸ் அடுப்பில் பொங்கல் வைத்தால் காஸ் அடுப்பு, குக்கரிலும் திருநீர், மஞ்சள், குங்குமம் இடலாம்.
பானையை, பாத்திரத்தை வைத்த பிறகு தண்ணீர் ஊற்றி அரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை உள்ளிட்டவற்றை போட்டு பொங்கலை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப செய்யலாம்.
பொங்கல் பானையை இறக்கியதும் அதை சுற்றி மஞ்சள் கொத்தை கட்டி சூரிய ஒளி படும்படி வெளியில் வைக்க வேண்டும். முழுநீள வாளை இலை அல்லது மூக்கு இலையில் பொங்கல், கரும்பு, வெற்றிலை, பாக்கு மற்றும் பட்சணங்களை வைத்து கற்பூரம், சாம்பிராணி காட்டி சூரிய பகவானை வணங்க வேண்டும்.
குறித்த நல்ல நேரம் தவிர்த்த மற்ற நேரங்களில் ராகு, எமகண்ட சமயங்களில் பொங்கல் படையல் செய்ய வேண்டாம். பின்னர் பூஜையறையில் வழிபட்டுவிட்டு கொஞ்சமாக பொங்கலை இலையில் வைத்து காகங்களுக்கு படைக்க வேண்டும். வீட்டில் மாடு வைத்திருப்பவர்கள் மாடுகளுக்கும் அளிக்கலாம். அதன்பின்னர் பொங்கலை குடும்பத்துடன் அமர்ந்து உண்ணலாம்.