2023தை முதல் நாள் (15-01-2023)தமிழர்களின் திருநாளாம் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.
இது தமிழர் கலாச்சாரத்தை உலகுக்கு உணர்த்தும் ஒரு உன்னத திருநாள். இது வேளாண்மையை அடிப்படையாக கொண்ட விவசாய திருநாள். இந்நாளில் தமிழர்களின் இறைவனான சூரியனுக்கு நன்றி செலுத்துவர்.
2023தைப்பொங்கல் திருவிழா உலகில் உள்ள அனைத்து தமிழர்களாலும் சூரிய நாட்காட்டியின் படி, தை மாதத்தின் தொடக்கத்தில் கொண்டாடப்படுகிறது.
பாரம்பரியமாக தமிழர்கள் சூரிய நாட்காட்டியவே தங்கள் நாட்காட்டியாக கடைபிடித்து வருகிறார்கள். அதன்படி சூரியன் மகர ராசியில் நுழையும்போது சூரியனின் ஆறு மாத நீண்ட பயணத்தின் தொடக்கத்தை இந்த பொங்கல் திருவிழா குறிக்கிறது.
இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா, மேலும் புதுச்சேரி, இலங்கை, சிங்கப்பூர், அமெரிக்கா, மலேசியா போன்ற பல நாடுகளிலும் தமிழ் மக்களால் கொண்டாடப்படுகிறது.