இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சற்று நேரத்திற்கு முன்னர் இலங்கை வந்தடைந்துள்ளார்.
மாலைதீவு பயணத்தை முடித்துக் கொண்டு அவர் இலங்கை வந்தடைந்தார்.
இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் இலங்கை விஜயம் ஜனவரி 2021 மற்றும் மார்ச் 2022 இல் அவர் முன்னைய இலங்கை விஜயங்களைத் தொடர்ந்து தற்போது இலங்கை வந்துள்ளார்.
அவர் இன்றும் நாளையும் இலங்கையில் இருப்பார்.
அமைச்சர் தனது விஜயத்தின் போது, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களை நடத்த உள்ளார், மேலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் பிற முக்கியஸ்தர்களை சந்திக்க உள்ளார்.
