பி.எஸ்.எம்.சார்ள்ஸின் இராஜினாமா தொடர்பில் ஜனாதிபதி இன்னும் தீர்மானிக்கவில்லை!தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பதவியை இராஜினமா செய்த பி.எஸ்.எம்.சார்ள்ஸின் இராஜினமாவை ஏற்றுக் கொள்வதா இல்லையா என்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்னும் தீர்மானிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. 

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கடமைகளில் இருந்து விலகுவதாக சார்ள்ஸ் கடந்த 25ஆம் திகதி ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். எவ்வாறாயினும், இராஜினமாவை ஏற்றுக் கொள்வதா இல்லையா என்பது தொடர்பில் ஜனாதிபதி எதிர்வரும் தினமொன்றில் தீர்மானிக்கவுள்ளதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதியது பழையவை