கிழக்கு மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளராக நஸார் நியமனம்!



கிழக்கு மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளராக பொறியியலாளர் உதுமாலெவ்வை அஹமட் நஸார் தனது கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கிழக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தில் பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளராக கடமையாற்றிய இவர் இலங்கை பொறியியலாளர் சேவை வகுப்பு- I ( SLES - I ) ஐச் சேர்ந்த இவர், கடந்த 25 வருடங்களுக்கு மேல் நீர்ப்பாசனத்துறையில் சேவை செய்த அனுபவத்தை பெற்ற சிரேஷ்ட பொறியியலாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை